in

குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து ST மாற்ற முயற்சி


Watch – YouTube Click

குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து ST மாற்ற முயற்சி

குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து S.T. பிரிவுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்துள்ளார்.

இந்திய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் தொகுதியில் IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறார். டாக்டர் பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலுக்கு வருகை தந்தபோது, அவருக்கு, தமிழ்நாடு குறும்பர் முன்னேற்ற சங்கத்தின் செயல் தலைவர் உதகை செங்குட்டுவன் மற்றும் கோயில் நிர்வாக தலைவர் தர்மராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் விருப்பத்தின் பேரில் அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். மிகவும் தொன்மையான இக்கோயிலில், பல பேருக்கு இலவசமாக திருமணம், அன்னதானம் வழங்கப்பட்டு வருவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். குறும்பர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான MBC யிலிருந்து ST பழங்குடியினர் வகுப்புக்கு மாற்றுவதற்கான கோப்புகள், மத்திய அரசிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மக்களவைத் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது

விஜயபிரபாகரனை ஆதரித்து சாத்தூர் பகுதிகளில் பிரேமலதா பிரச்சாரம்