in

9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்


Watch – YouTube Click

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி நெல்லை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு எடுத்து பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் மாநில செயலாளர் சுப்பு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் மேலும் அரசு எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் 22ஆம் தேதி அலுவலக வாசலில் காத்திருக்கும் போராட்டமும் வரும் 27ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டதில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர் இந்த போராட்டத்தின் காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரக் கேடு பொதுமக்கள் அவதி

இயக்குனர் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்ட கொள்ளையர்கள்