தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இரட்டைமலை சீனிவாசனார் 167-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மற்றும் ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில், திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 167-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போல்டன்புரத்தில் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் அறிவுறுத்தலின்படி, கழக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் உத்தரவின்படியும் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் SDR சாமுவேல் ராஜ் ஆலோசனைபடியும் தூத்துக்குடி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போல்டன்புரத்தில் இரட்டைமலை சீனிவாசனாரின் புகைப்படம் மட்டும் இருந்தது தற்போது அதை திருவுருவசிலையாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாற்றி அமைத்துக் கொடுத்தனர்.
இந்நிலையில் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 167-வது இன்று பிறந்தநாளை முன்னிட்டு இதை கொண்டாடும் வகையில் 44வது வார்டு கழகச் செயலாளர் விஜய் கண்ணன் தலைமையில் இரட்டைமலை சீனிவாசனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது கொள்கைகளை பின்பற்றி சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில், தெற்கு பகுதி கழகச் செயலாளர் இசக்கிமுத்து, 50வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மத்திய மேற்கு பகுதி இணைச் செயலாளர் சுந்தர், 54வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் வெங்கடேஷ், மற்றும் கழக நிர்வாகிகளான சேமா ஆறுமுகம், செல்வராஜ், சில்லு கார்த்தி, அபிஷேக், தெய்வேந்திரன் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


