பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள்
பிரிட்டனில் டெண்ட் அமைக்க உள்துறை அமைச்சர் எதிர்ப்பு
பிரிட்டனில் டெண்ட் அமைத்து ஏராளமானோர் சாலையோரம் வசிக்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே டெண்ட் அமைத்து வசிப்பவர்களுக்குத் தடை விதிக்க உள்துறை அமைச்சர் சூவெல்லா பிராவர்மேன் முடிவு செய்துள்ளார். தடையை மீறி டெண்ட் அமைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் சூவெல்லா பிராவர்மேன் எச்சரிக்கை விடுத்தார்.
விளையாட்டு வீராங்கனைகளை சீண்டிய ரக்பி வீரர்கள்
பிரிட்டனின் பார்பேரியன் ரக்பி அணியைச் சேர்ந்த வீரர் அபி. இவர் 3 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். எனவே அவரை போலீஸôர் கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது விளையாட்டு வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என அபி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் அளித்து வழக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நாட்டிங்ஹாமில் அமெரிக்க நாய் தாக்கி இருவர் கவலைக்கிடம்
நாட்டிங்ஹாமில் அமெரிக்க நாய் தாக்கி இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். நாட்டிங்ஹாமில் அமெரிக்காவின் எக்ஸ் எல் வகையைச் சேர்ந்த நாயானது ஒரு ஆண் மற்றும் பெண்ணைக் கடித்துக் குதறியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
இனவெறியைத் தூண்டிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. தலைமைக் கொறடாவிடம் சரண்
இங்கிலாந்தின் இனவெறியைத் தூண்டிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பாப் ஸ்டூவர்ட் அக்கட்சியின் தலைமைக் கொறடாவிடம் சரண் அடைந்தார். முன்னதாக இஸ்லாமியர் ஒருவரைப் பார்த்து பெக்கன்ஹாம் தொகுதி எம்.பி. பாப் ஸ்டூவர்ட், பஹ்ரைனுக்குச் செல்லுமாறு ஆவேசத்துடன் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தவே, இந்த வழக்கில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பாப் ஸ்டூவர்ட் அக்கட்சியின் தலைமைக் கொறடாவிடம் சரண் அடைந்தார். மேலும், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார்.
டெவான், கார்ன்வால் பகுதியில் வெள்ள எச்சரிக்கை
இங்கிலாந்தில் சமீபத்தில் சியாரன் புயலும் மழையும் போட்டு தாக்கியது. இந்த நிலையில், டெவான், கார்ன்வால் பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுதவிர டெவான், கார்ன்வால் பகுதியில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரிட்டனில் பேரணி
இஸ்ரேல்} பாலஸ்தீனப் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரிட்டனில் பேரணி நேற்று நடைபெற்றது. லண்டன், கிளாஸ்கோ, மான்செஸ்டர் என நாடு முழுவதும் பேரணி நடந்தது. இதில், லண்டனில் மட்டும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 3,000 பேர் பேரணியில் பங்கேற்றனர்.