சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு தேங்காய், பூசணிக்காய்,பாகற்காய் இவற்றில் தீபமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயம், காலபைரவரின் 108 நாமாவளியில், சேத்திரபாலாய போற்றி என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்றதாகும்.
பைரவரின் சூலாயுதம் இந்த ஆலயத்தில் கிடைக்கப்பெற்றதால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது.அர்ஜூனன் வழிபட்டதாக புராணம் கூறும் இந்த காலபைரவர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்பட்டது திருமணத்தடை நீங்கவும்,நினைத்த காரியம் கைகூடவும்,தேங்காய்,பூசணிக்காய், பாவற்காய் இவற்றில் தீபமிட்டு,காலை முதலே ஏராளமான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து வழிபட்டனர் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன ஏராளமான பக்தர்கள் பைரவர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர்.


