பிரேம்குமார் வாண்டையாருக்கு மலரஞ்சலி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் மூவேந்தர் முன்னேற்ற கழக முதல் தலைவர் பிரேம்குமார் வான்டையார் நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது .
நிகழ்ச்சிக்கு முவேந்தர் முன்னேற்ற கழக மாநில துணை செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில செயலாளர் வைபவ் வான்டையார் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார் பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மணி மற்றும் மூ.மு.க. அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

