in

செஞ்சியில் அகிம்சை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

செஞ்சியில் அகிம்சை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம், காந்தி பஜார்,பேருந்து நிலையம், விழுப்புரம் சாலை, சத்திர தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் திருவண்ணாமலை சாலை வழியாகச் சென்று, மீண்டும் காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

அகிம்சை பிரசார விழிப்புணர்வு ஊர்வலம் சன்மார்க்க சங்க தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் தனசேகரன் பொருளாளர் அண்ணாமலை தலைமையில் சன்மார்க்க சங்க துணை தலைவர் சரவணன்,தவமணி பாண்டுரங்கன் செல்வராஜ் இவர்களின் முன்னிலையில், வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் நடுப்பட்டு புருஷோத்தமன், ரவிச்சந்திரன் இவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில்

எதிர்வரும் ஆடி மாதத்தில் உயிர் பலி தடுப்பு அகிம்சை பிரசார விழிப்புணர்வு ஊர்வலத்தில், சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.

“கொல்லாதே  கொல்லாதே..உயிரினங்களை கொல்லாதே…”, “தெய்வத்தின் பெயரால் உயிரினங்களை பலியிடாதே…”, “மகாவீரரின் அகிம்சையையும், வள்ளுவரின் வாக்கையும் போற்றி உயிர்களைக் காப்போம்” போன்ற முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், பெண்கள் கோலாட்டம் ஆடி அகிம்சையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

What do you think?

நாமக்கல் ராசிபுரத்தில் கற்பக வெற்றி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா ஏராளமானோர் பங்கேற்பு

பிரேம்குமார் வாண்டையாருக்கு மலரஞ்சலி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்