மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று பூஜை செய்து அங்காளம்மனை வழிபட்டனர்.
கைலாய திருக்காட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மேல்மலையனூர் அங்காளம்மன்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருகோயிலில் ஆனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருகோயில் வளாகத்தில் திரு விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு கைலாய திருக்காட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்
மேலும் உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் உற்சவ அம்மனுக்கு பம்பை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கு பூஜையில் ஈடுபட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.


