பெருங்கடல் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தலைமன்னார் முதல் சென்னை வரை கடலுக்கு அடியில் சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
பெருங்கடல் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இலங்கை தலைமன்னார் முதல் சென்னை வரை கடலுக்கு அடியில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கிழிந்த வலைகளை தன்னார்வலர்கள் குழு சே.கரித்தனர்.
பெருங்கடல் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக சென்னையை சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது தன்னார்வளர்கள் குழு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கவனம் செலுத்தி, முக்கிய இடங்களில் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடல் சார்ந்த சூழல் பாதுகாப்பையும், கடற்கரையின் மாசு குறைப்பை மேம்படுத்தும் விதமாக இலங்கை தலை மன்னாரில் இருந்து ராமேஸ்வரம், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை வரை கடலுக்கடியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு அபாயம் ஏற்படுத்தும் மீனவர்களால் கைவிடப்பட்ட சேதமடைந்த வலைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்தனர்.
கடலுக்கு அடிப் பகுதிகளில் மேற்கொண்ட தூய்மை பணியில்;, மிகுந்த அளவிலான கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு சுத்தப்படுத்தபட்டது.
இதன்மூலம், உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்ளுக்கு ஆரோக்கியமான கடற்கரை உருவாக்கப்பட்டது.
சுமார் 220 கிலோ கிழிந்த வலைகள் தூய்மைப்பணிகளின் மூலம் சேகரிக்கப்பட்டன, மேலும் பல சேமடைந்து கிழிந்த மீன் பிடி வலைகள் கடலிலிருந்து அகற்றப்பட்டன.


