தேரழந்தூர் பொன்னம்மா காளியம்மன் ஆலய நான்காம் ஆண்டு ஆடித்திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரழந்தூர் கீழையூர் கிராமத்தில் பொன்னம்மா காளியம்மன் ஆலய நான்காம் ஆண்டு ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக தேரழந்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அலகு காவடிகள் அலங்கார காவடிகள் கூண்டு காவடிகள் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி பவளக்காளி வீரஅய்யனார் ஆட்டத்துடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகமும் மகாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டது இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி பால்குடங்களை தலையில் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

