in

ஆலயத்தில் செல்போன் வைக்க டோக்கன் கவுண்டர்

ஆலயத்தில் செல்போன் வைக்க டோக்கன் கவுண்டர்

 

பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் செல்போன் வைக்க டோக்கன் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகம் எதுவும் நடைபெறாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே 48 நாட்கள் தைலாபிஷேகம் நடைபெறும். அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கி அம்மனை வழிபட்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் புனித தன்மை கருதி இன்று முதல் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பிரத்யேக செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஐந்து ரூபாய் செலுத்தி செல்போனை பாதுகாப்பாக வைத்து செல்ல வேண்டும் – மீறி ஆலயத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What do you think?

செல்போன் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை அமுலுக்கு வந்தது

செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை