தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் மேல் சுவரில் சுத்தப்படுத்தல் பணி
தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் மேல் சுவரில் சுத்தப்படுத்தல் பணி தொடங்கியது

பெருவுடையார் கோயில் மதில் சுவரின் மேல் பகுதியில் படர்ந்திருக்கும் புதர்ச்செடிகளை அகற்றி, சுத்தப்படுத்தும் பணிகள் இந்திய தொல்லியல் ஆய்வகம், கண்காணிப்பு தொல்லியல் அதிகாரி, இந்திய தொல்லியல் ஆய்வகம், திருச்சி வட்டம் திரு. அறவாழி அவர்களின் அறிவுரையின்படி, மதில் சுவரின் மேல் பரப்பில் வேரூன்றியிருக்கும் மரங்கள் மற்றும் புதர்ச்செடிகளை வேரோடு பிடுங்கி அகற்றுதல், காட்டுப் பகுதிகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் விரைந்து நடைபெறுகின்றன.

தற்போது 20 முதல் 25 தொழிலாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதில் சுவர் சுத்தப்படுத்தல் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் முடிந்த பின்னர், மதில் மேல் பகுதியில் கற்கள் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் ஆய்வகம் திட்டமிட்டுள்ளது.


