in

வெற்றிக் கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

வெற்றிக் கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

 

நம்ம நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக அரசியல்ல ஒரு புதிய அத்தியாயமா சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்துல, தமிழக முதல்வரா நம்ம த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் முதன்முறையா தேசியக் கொடியை ஏத்தி மாஸ் காட்டியிருக்காரு!

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்துக்கு, தமிழ் சினிமாவோட ‘வார்த்தை ஜாலக்காரர்’னு சொல்லப்படுற நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தன்னோட சொந்த ஸ்டைல்ல முதல்வருக்கு தெரிவிச்ச வாழ்த்து செய்தி இப்போ சோஷியல் மீடியாவுல பயங்கர வைரல்!

பார்த்திபன் தன்னோட வாழ்த்துல, “‘வெற்றிக் கொடி கட்டு’ படத்துல நடிச்ச நான்… அரசியல்ல வெற்றிக் கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாநில முதல்வரா சுதந்திர தினத்துல மூவர்ணக் கொடியை ஏத்துறதைப் பத்தி கவிதை இயற்றுவதா? அட கவிதையா இல்லாவிட்டாலும் உரைநடையாவது…”னு தன்னோட ‘வெற்றிக் கொடி கட்டு’ படத் தலைப்பை வச்சே செமயா ஆரம்பிச்சிருக்காரு!

தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகையைப் பத்திப் பேசின பார்த்திபன், “அரசியலுக்கு வர பெரிய அனுபவம் தேவையில்லை, மக்களுக்கான சம்பவம் செய்ய நினைச்சா போதும்ங்கிற நம்பிக்கையை இளைஞர்கள் மனசுல ஏத்தினவர் நம்ம முதல்வர்!

ஆட்சி அதிகாரம் பிடிக்கப் பணம் தேவையில்லை, மக்களோட நன்மதிப்பை சம்பாதிச்சாலே போதும்னு அரசியல்வாதிகளுக்கே பாடம் எடுத்திருக்காரு”னு பாராட்டித் தள்ளியிருக்காரு!

அதுமட்டுமில்லாம விஜய்யின் ஆட்சி நிர்வாகத்தைப் பத்தியும் பேசின அவரு, “தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கினது, விவசாயிகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊக்கத்தொகை கொடுத்தது, முக்கியமா லஞ்சம் வாங்க இதயத்துல கொஞ்சமா பயத்தை ஏத்தினவர் நம்ம முதல்வர்!

இப்படி பல நன்மைகளை ஏத்தின தகுதியோட இந்த ஆகஸ்ட் 15-ல பெருமையோட சுதந்திரக் கொடியை ஏத்துறாரு”னு கவித்துவமா முடிச்சிருக்காரு!

திரை உலக நண்பரா இருந்து, இப்போ முதல்வரா கம்பீரமா கொடியேத்துற விஜய்க்கு, பார்த்திபன் தன்னோட சினிமா டைட்டில், கவிதை, அரசியல்னு எல்லாத்தையும் கலந்து கொடுத்த இந்த வாழ்த்து பதிவு இப்போ இணையத்துல செம டிரெண்டிங்!

பார்த்திபனின் இந்த கவிதையான வாழ்த்து பத்தியும், விஜய்யின் முதல் சுதந்திர தினக் கொடியேற்றம் பத்தியும் நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே? மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!”

What do you think?

Ruletă cu mize mici volatilitate ridicată

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது