in

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்


Watch – YouTube Click

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

 

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை திருவிக திடலில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்-ஷை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நிலையான கோட்பாடு உறுதியோடு இருப்பதால்தான் நாங்கள் எவரோடும் கூட்டணி இல்லை. இங்குள்ள கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

எங்கள் முன்னோர்கள் மீது குறை இருக்கிறது விமர்சனம் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் செய்த பிழை இந்தியன். அதனால் தேவிகுளம் பீர்மேடு உள்ளிட்ட தாலுகாக்களை கொண்ட இடுக்கி மாவட்டம் கேரளாவிற்கு சொந்தமாகி போனது. காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதியில் வசிப்பவர்கள் தமிழ்நாட்டோடு போவோம் என்று சொன்னார்கள் ஆனால் முன்னவர்கள் செய்த தவறு கர்நாடகாவிற்கு கொடுத்துவிட்டார்கள்.

மக்கள் பட்டினியில் கிடந்து செத்துப் போனால் கட்டையில் எரிக்காமல் மின் மயானத்தில் எரிப்பது வளர்ச்சியாம், பிச்சைக்காரர்கள் ஸ்வைப் மிஷின் வைத்து பிச்சை எடுப்பது வளர்ச்சி என்று கட்டமைக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள் .

எல்லா வளங்களும் உள்ள இந்த நாட்டில் ஒரு வெங்காயத்தை விளைவிக்க முடியவில்லை. ஒரு பாலைவன நாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நிலை இங்கு உள்ளது.அவரவர் மொழியை புகழ்ந்து பேசி கொள்ளுங்கள், ஆனால் எம் தமிழ் மொழியை இழிவாகப் பேசும் உரிமை யாருக்கும் இல்லை.

தமிழ் மாநிலம் மீது அக்கறை இல்லாத இந்திய கட்சிகள் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை காவிரி நீரை பெற்றுத் தருவதில் தமிழக முதலமைச்சர் பொறுப்பற்ற நிலையில் உள்ளார் .

தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை பெறுவதற்காக பிரதமர் தமிழகத்திற்கு வந்து பாரதியாரை பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பேசி வருகிறார்கள்.
விவசாயிகளை தீவிரவாதி போல் நடத்துகிறார் மோடி என்று விமர்சித்து வரும் ஸ்டாலின் திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு எதிராக போராடிய ஏழு விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டுள்ளாரே!

அவர் விவசாய நலனை பேசுவது வேடிக்கையாக உள்ளது. புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் ஸ்டாலின் பிஎம் ஸ்ரீ பள்ளியை ஆதரிப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கை என்பது நம் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் ஆகும்புதிய கல்விக் கொள்கை என்பது நம் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று பெரும் கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள்.

நமக்கான காலத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் தமிழர் கட்சி சின்னமான மைக் சின்னத்தில் வேட்பாளர் ஜல்லிகட்டு ராஜேஷுக்கு வாக்களிக்க வேண்டுமென பேசினார்.
கூட்டத்தில் முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது அதனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார்.
மேலும் சீமான் பேசுகையில் பல இருக்கைகள் காலியாக கிடந்தது.


Watch – YouTube Click

What do you think?

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 16.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

நாட்டை காக்கும் வேள்வியில் நானும் அங்கே உள்ளேன் – திருச்சியில் கமல்ஹாசன் பேட்டி