in

புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் தா மோ அன்பரசன்


Watch – YouTube Click

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரூபாய் 91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதாபுரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 11.97 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். அச்சிறுபாக்கம் ஒன்றிய குழுத் தலைவர் கே. கண்ணன், சீதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கரசங்கால் ஊராட்சியில் ரூபாய் 13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்,வேலாமூர் ஊராட்சியில் ரூ 8.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை,காட்டுக்கூடலூர் ஊராட்சியில் ரூ 9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை,சிறுநாகலூர் ஊராட்சியில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பிலாப்பூர் ஊராட்சியில் ரூபாய் 13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் படாளம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய புதிய கட்டிடங்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அதன் பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்


Watch – YouTube Click

What do you think?

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனியா பாலகிருஷ்ணனை

திருச்சியில் நடைபெறும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம்