in

சிவ ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு

சிவ ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு

 

நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியில் உள்ள சிவ ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு

நாமக்கல் – மாவட்டம் சேந்தமங்கலம் வட்டடம் கூலிப்பட்டி முருகன் கோவிலில் மலை மீது இருக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வர் சிவ ஆலயத்தில், புரட்டாசி மாத திங்கள் தினத்தை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றன..

இக்கோவிலில், ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டு சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், காலை 10 மணி முதல், மதியம் 3 மணி வரை, தமிழ் வேதமாகிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றன.

அப்போது நடராஜ பெருமான் திருவுருவப்படத்திற்கு மலர்களால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது .

கோவில் பிரதான மூலவர் ஜம்புகேஸ்வரருக்கும் மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஜம்புகேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டுக்குழு சிவனடியார் திருக்கூட்டம் செய்துள்ளது.

மாதந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமையன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது..

What do you think?

உலக இதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் விழிப்புணர்வு

காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா