in

மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு…மக்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ

மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு…மக்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ

 

மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு… மீண்டும் மக்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா – உற்சாக வரவேற்பு

“எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்” – முன்னாள் எம்.எல்.ஏ.விடம் முதலியார்பட்டி மக்கள் உறுதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, அகஸ்தியர்புரம், தெற்கு அகஸ்தியர்புரம், வடமலைசமுத்திரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நிலவி வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனை கண்டித்து கடந்த 11.09.2026 அன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தங்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது போராட்டப் பகுதிக்கு சென்ற அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவின் காரையும் பொதுமக்கள் வழிமறித்து, தங்களது மின்தடை பிரச்னையை தெரிவித்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த இசக்கி சுப்பையா, மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தினார்.

இந்நிலையில், அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு மின்விநியோகம் சீராக உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மீண்டும் முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார்.

அங்கு பொதுமக்களை சந்தித்து, “மீண்டும் மின்தடை ஏற்படுகிறதா? மின்சாரம் சீராக வழங்கப்படுகிறதா?” என நேரடியாக கேட்டறிந்தார். அதற்கு பொதுமக்கள், “நீங்கள் பேசிய பிறகு இதுவரை மின்தடை ஏற்படவில்லை; மின்சாரம் சீராக வழங்கப்படுகிறது” என தெரிவித்தனர்.

மேலும், தங்களது பிரச்னையை நேரில் கேட்டறிந்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்ததற்காக ஊர் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது சில பொதுமக்கள், “நீங்கள்தான் எங்கள் ஊரு எம்.எல்.ஏ.; எந்த சூழ்நிலையிலும் உங்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என தெரிவித்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

மேலும், கடந்த போராட்டத்தின்போது ஒரு சிலர் பேசிய வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் சென்ற பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், தங்களது குறைகளையும் நேரில் தெரிவித்தனர்.

மின்விநியோகம் மட்டுமின்றி, அப்பகுதியில் நிலவும் பிற அடிப்படை பிரச்னைகள் குறித்தும் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மின்வெட்டை கண்டித்து கடந்த 11ஆம் தேதி சாலை மறியல் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின்விநியோகம் சீராக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

What do you think?

பலத்த மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

உலக இதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் விழிப்புணர்வு