in

உச்சிஷ்ட மகாகணபதி திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

உச்சிஷ்ட மகாகணபதி திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

 

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட மகாகணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கோவிலில் நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் .

ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகருக்கு தனி சன்னதி என பல்வேறு சிறப்புகளை கொண்ட பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலாக நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட மகாகணபதி திருக்கோவில் விளங்கி வருகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நிலவேணி அம்பாள் சமேத உச்சிஷ்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

 

தொடர்ந்து கொடிப்பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் கொடிமரத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகமும், கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.

தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து, கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விநாயகப் பெருமான் மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

What do you think?

புதுச்சேரி …வ உ சி பிறந்தநாள் மற்றும் அன்னை தெரேசா நினைவு நாள் ஒட்டி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..

கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா