in

பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு – மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு


Watch – YouTube Click

பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு – மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு

 

தென்காசியில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு தீயணைப்புத் துறை சார்பில் வழங்கப்படும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளி பேருந்துகள் அனைத்தும் குழந்தைகள் பயணிக்க தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள் அனைத்தும் இ சி இ அரசு மேல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பேருந்துகளில் உயரமானபடிக்கட்டுகள் அமைக்க கூடாது, குழந்தைகள் ஜன்னல் ஓரத்தில் விழுந்து விடாதபடிகம்பிகள் அமைப்பது, இருக்கைகள் உறுதியாக பொருத்தப்படுதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைப்பது உள்ளிட்டவைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், உதவி காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

கோடை வெயிலை சமாளிக்க சிக்னல்களில் நிழற்கூரை அமைத்த மதுரை மாநகராட்சி

இந்த ஆண்டு வெயில் அளவு குறைவு என்று சொன்னால் நம்ப முடிகிறதா?