in

இந்த ஆண்டு வெயில் அளவு குறைவு என்று சொன்னால் நம்ப முடிகிறதா?


Watch – YouTube Click

இந்த ஆண்டு வெயில் அளவு குறைவு என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

 

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சூரியபகவானுக்கு மக்கள் மீது என்ன கோவமோ தெரியவில்லை. இப்படி வெயில் அடித்து மக்களை வதைக்கிறது என மக்கள் அனைவரும் புலம்பி செல்கின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் பயங்கரமாக கொளுத்தி வருகிறது.

இவ்வாறு இருக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக திகழும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரி தாண்டாமல் இருந்தாலும் கடந்த இரண்டு மூன்று நாட்களில் சுமார் 104 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு வெயில் அளவு குறைவு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் கடந்த 2003-ம் ஆண்டு தான் தமிழகத்தில் அதிகபட்சமாக வெயில் அடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் வெயில் குறைவு தான் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். நாம் ஏசி மற்றும் மின்விசிறியில் இருந்துவிட்டு வெளியே செல்லும் போது வெப்பநிலை உயர்வதாக நமக்கு தெரிகிறது என்று கூறுகின்றனர்.

சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் கூட தற்போது வெறிச்சோடி கிடைக்கின்றன. இல்லாமல் எப்போதும் கூட்டமாக காணப்படும் மெரினா கடற்கரையிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.‌ ஆனால் சாயங்காலம் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்த வண்ணம் இருப்பதை காண முடிகிறது.

சென்னையில் அடுத்த ஒரு வாரம் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் வேறு தொடங்கி இருப்பதால் மக்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு – மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு

நேபாள 100 ரூபாயில் இந்திய பகுதிகள் திடீர் சர்ச்சை