in

நேபாள 100 ரூபாயில் இந்திய பகுதிகள் திடீர் சர்ச்சை


Watch – YouTube Click

நேபாள 100 ரூபாயில் இந்திய பகுதிகள் திடீர் சர்ச்சை

இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது.

இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடனான எல்லை பிரச்சனை என்பது தொடர்கதையாகவே நிலவி வருகிறது. முன்னதாக இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லை பகுதிக்கு அருகாமையில் இருக்கும் 30 இடங்களுக்கு பெயர் வைத்து உரிமை கொண்டாடியது சீனா.

ஸங்னங் என பெயரிடப்பட்ட இந்த பகுதிகளில், 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு நிலப்பகுதி ஆகியவை இருந்தன. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ஒரு வீட்டின் பெயரை மாற்றினால் அது அவருக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேச பகுதிகள் எப்போதும் இந்திய பகுதிகளாகவே தொடரும் என கூறினார்.

எல்லை விவகாரத்தில் 2017, 2020, 2023 , 2024 ஆகிய ஆண்டுகளில் சீனா தொடர்ந்து பிரச்சனை செய்து வரும் வேளையில், நேபாளமும் தற்போது புதிய எல்லை பிரச்னையை எழுப்பியுள்ளது. இந்தியா – நேபாள எல்லையில், இந்தியா பராமரித்து வரும் லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை தங்கள் எல்லை பகுதிக்குள் சேர்த்து புதிய வரைப்படத்தை புதிய நேபாள 100 ரூபாய் நோட்டில் அந்நாட்டு அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது.

நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, 100 ரூபாய் நோட்டை மறுவடிவமைக்கவும், பழைய ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட பழைய வரைபடத்தை மாற்றவும் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் மற்றும் தொடர்பாளர் சர்மா கூறினார்.

கடந்த 2020 ஜூன் 18ஆம் தேதியே, நேபாள அரசு, லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை இணைத்து, நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை புதுப்பிக்கும் செயல்முறையை நிறைவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியது. நேபாளத்தின் இப்படியான செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்து இருந்தது.

நேபாள நாடானது இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் சுமார் 1,850 கிமீ எல்லை பகுதியை பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

இந்த ஆண்டு வெயில் அளவு குறைவு என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

பிரேசில் கனமழைக்கு 39 பேர் பலி