in

ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி


Watch – YouTube Click

ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி… யாருமே புள்ளைகளை நம்பாதீங்க… இரண்டு மகன்களும் கைவிட்ட நிலையில் ஆட்சியரிடம் உதவி கேட்டு கண்ணீர் விட்டு அழுத மாற்றுத்திறனாளி முதியவர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட எழிலுர் அருகிலுள்ள நேமம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் வயது 59.லட்சுமனனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் லட்சுமணன் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தார்.

இதயைடுத்து மாவட்ட ஆட்சியர் வருகை தந்ததும் அலுவலக நுழைவாயில் காத்திருந்த முதியவர் லட்சுமணன் அவரிடம் கண்ணீர் விட்டு அழுத படி தனது குறைகளை கூறினார்.தனக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும் இருவரும் தன்னை கவனிக்காத நிலையில் தான் முதுகு தண்டு வட அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாமல் தவித்து வருவதாகவும் தனக்கு ஏதேனும் உதவி செய்யும்படியும் கேட்டு கதறி அழுதார்.இதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உடனடியாக மாற்றுத்திறனாளி அலுவலரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் உள்ள முட நீக்கவியல் துறை வல்லுனர் முதியவரிடம் வந்து அவரது மருத்துவ அறிக்கைகளை வாங்கி பார்த்தார். தொடர்ந்து முதியவரை அவர் கை தாங்கலாக மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.அப்போது நடந்து வரும் போதே முதியவர் அழுது புலம்பியபடியே வந்தார்.இரண்டு மகன்களையும் படிக்க வைத்தேன் அசிங்க அசிங்கமாக என்ன திட்றானுங்க கொலைகார பாவிங்க யாருமே பிள்ளைகளை நம்பாதீங்க பிள்ளைகளை நம்பினால் நடுத்தெருவில் நிக்க வச்சு கையில தட்ட கொடுத்துடுவானுங்க என்று புலம்பியபடியே வந்தார்.

ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர் ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி என்று கூறி னார்.மாவட்ட ஆட்சியரிடம் பேசும்போதும் தன்னை மகன்கள் கவனிக்கவில்லை என்றும் தனக்கு ஒரு பெண் பிள்ளை இல்லை என்றும் அவர் கூறினார்.இதனையடுத்து அவரிடம் மாற்றுத்திறனாளி அலுவலர் பாதிப்பு அதிகம் இருப்பதால் உங்களுக்கு 2000 ரூபாய் வரை மாத உதவி தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு நாளை மன்னார்குடியில் நடைபெறவிருக்கும் முகாமுக்கு வருமாறு கூறினார்.

அதற்கு முதியவர் ஆதார் கார்டையும் தனது மகன் வாங்கி வைத்துக் கொண்டதாகவும் தான் டீக்கடையில் எச்சில் கிளாஸ் கழுவி சம்பாதிக்கும் பணத்தையும் பிடுங்கி கொள்வதாகவும் ஆதார் கார்டை கேட்டால் அடித்து துன்புறுத்துவான் என்றும் கூறி புலம்பினார்.மேலும் அவர் அருகில் அமர்ந்து இருப்போரிடம் யாரும் பிள்ளைகளை நம்பாதீங்க என்று புலம்பிய வண்ணம் இருந்தார். அவரது மனைவியும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அவருக்கு வரும் உதவித்தொகையை மூத்த மகனிடம்கொடுத்து அவன் வீட்டில் இருந்து வருவதாகவும் தான் மட்டும் தனியாக குடிசையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு மகன்கள் இருந்த போதும் கவனிக்க ஆள் இன்றி தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவர் கடைசி காலத்தில் தன்னை கவனிக்க தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கத்திலும் மகன்களால் நிராகரிக்கப்பட்ட துக்கத்திலும் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரைய வைத்தது.


Watch – YouTube Click

What do you think?

கணவருடன் வாழ்ந்து கொண்டே விதவை உதவி தொகை பெற்ற களவாணி மனைவி

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை