in

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி கழிவுகளுடன் வந்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன


Watch – YouTube Click

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி கழிவுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளுடன் வந்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவியதை தொடர்ந்து தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள 26 இடங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் பறவைக் காய்ச்சல் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை சாவடிகள் மூலமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து சோதனை சாவடிகளிலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் மருந்து தெளித்த பின்பு தமிழகத்திற்குள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக 50க்கும் மேற்பட்ட கோழி ஏற்றி செல்லும் வாகனங்கள் வந்து செல்கின்றன. இன்று மாலை புளியரை சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர் நாகராஜன் தலைமையில் மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்த பொழுது கோழி கழிவுகள் இருந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும் கோழி ஏற்றுச்செல்லும் பெட்டிகளில் கோழி குஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த வாகனங்களும் திருப்பி அனுப்பும் பணிகளும் நடைபெற்றன. மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் சோதனை சாவடியில் திடீர் ஆய்வுகளை எல்லைப் பகுதியில் நடத்தி வருவதால் கால்நடை துறை அதிகாரிகள் முழுமையான சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

பூஜ்யம் மதிப்பெண் தான் திமுக அரசு பெற்றுள்ளது – சட்டமன்ற துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

கோடை வெயிலை சமாளிக்க சிக்னல்களில் நிழற்கூரை அமைத்த மதுரை மாநகராட்சி