in

பள்ளியின் உரிமையாளர் மீது நடவடிக்கை – ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு


Watch – YouTube Click

பள்ளியின் உரிமையாளர் மீது நடவடிக்கை – ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு

 

தென்காசி அருகே விவசாயத்திற்கு செல்லக்கூடிய அரசு பொது பாதையை ஆக்கிரமித்தல், முறைகேடாக பள்ளி கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டு வரும் பள்ளியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு

தென்காசி மாவட்டம் இலஞ்சி கிராமத்திற்கு அருகே தனியா உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பின்புறம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்களில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கும் விவசாயத்திற்கும் செல்லக்கூடிய அரசுக்கு சொந்தமான பொது பாதையை பள்ளியின் நிர்வாகி ஆக்கிரமித்து உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அப்துல் மஜித் மனு அளித்தார். அந்த மனுவில் விவசாய நிலத்திற்கு சென்று வரக்கூடிய அரசுக்கு சொந்தமான பாதையை பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது.

மேலும் அந்தப் பள்ளியில் அமைந்துள்ள மாணவர் தங்கும் விடுதி, மாணவிகள் தங்கும் விடுதி, உணவருந்தும் அறை மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அரசு விதிகளின்படி கட்டப்படவில்லை. வனத்துறையின் தடையின்மை சான்று, கோட்டாட்சியர் தடைமைச் சான்று உள்ளிட்டவைகள் எதுவும் பெறப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வருகிறது.

அந்த வகையில் பொதுமக்கள் விவசாயிகள் உபயோகப்படுத்தும் அரசுக்கு சொந்தமான பொது பாதையினை வேலி அமைத்து ஆக்கிரமித்தல், எவ்வித தடை இன்மை சான்று பெறாமல் பள்ளி விடுதி, நீச்சல் குளம் போன்றவை சட்டவிராதாகமா கட்டி அமைத்தல், இலஞ்சி பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் பள்ளியின் உரிமையாளர் ரப்பானி என்பவர் செயல்பட்டு வருகிறார்.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயத்திற்கு செல்லக்கூடிய பொது பாதை ஆக்கிரமிப்பினை அகற்ற வழிவகை செய்ய வேண்டும் என மனு அளித்ததாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

0

ஆர்வத்துடன் நுங்கு வண்டி ஓட்டிய மாணவர்கள் – நுங்கு குறித்து விழிப்புணர்வு

எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகன வேலையை பாஜக அரசு செய்து வருகிறது