in

தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி வாக்கு சேகரித்தார் நடிகை ரோகிணி


Watch – YouTube Click

தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி வாக்கு சேகரித்தார் நடிகை ரோகிணி

 

பழனியில் வாக்காளர்கள் முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி நடிகை ரோகிணி வாக்கு சேகரித்தார்.

பழனியில் திரைப்பட நடிகை ரோகிணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் பழனி நகரில் ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சத்யா நகரில் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் நடிகை ரோகினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தனக்கும் தெலுங்கு தெரியும் என ரோகிணி கூறினார் உடனே அங்குள்ள மக்கள் தெலுங்கில் பேசுமாறு ரோகிணியிடம் கேட்டுக்கொண்டனர்.

வாக்காளர்கள் முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் 80 சதவீதம் கல்வி அறிவு பெற்றுள்ளனர் ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளக்கூடிய மாநிலங்களில் பெண்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர்.

கேஸ் விலையை கடுமையாக உயர்த்திவிட்டு தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்து நாடகமாடுகின்றனர். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுகிறது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என ரோகிணி கேட்டுக்கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

ஒற்றை விரலை வைத்து ரசம் சோறு கூட திங்க முடியாது- திண்டுக்கல்லில் ஐ லியோனி கிண்டல் பேச்சு

தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி