in

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி


Watch – YouTube Click

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

 

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து வருகிறது. புதுச்சேரி 967 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக துணை ராணுவப் படையினர் மற்றும் சிசிடிவி கேமரா பொதுமக்கள் வெயிலில் வாக்குகளை பதிவு செய்வதற்காக தண்ணீர் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு மகளிர் கல்லூரி மற்றும் மோதிலால் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது இன்றும் நாளையும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 600 ஊழியர்கள் புதுச்சேரிக்கு வர வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியரமான குலோத்துங்கன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார்...

ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த குலோத்துங்கன் புதுச்சேரியில் 967 வாக்கு மையங்கள் உள்ளது… வாக்கு இயந்திரங்கள் சின்னம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது…. புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது… புதுச்சேரி லாஸ் பேட்டையில் உள்ள மகளிர் வழியில் கல்லூரி மற்றும் மோதிலால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் இந்த பணியானது நடைபெற்று வருகிறது…. எதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 60 ஊழியர்கள் வந்துள்ளனர் இவர்களில் புதுச்சேரியில் 46 நபர்களும், காரைக்காலில் 10 நபர்கள், மாஹி, ஏனாம் தலா 2 நபர்கள் சின்னம் பொருத்தம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…

ஒவ்வொரு இடத்திலும் வேட்பாளர்கள் முன்னிலையில் பெல் நிறுவன ஊழியர்கள் சின்னம் பொருத்தம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்… இவை அனைத்துமே வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டு நாட்கள் நடைபெறும்,

மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை, சிசிடிவி கேமரா பொருத்தும் பட்டுள்ளது…10 துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 6 படையினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். மீதமுள்ள 4 படையினர் வரவுள்ளனர்…புதுச்சேரியில் பதட்டமான வாக்கு சாவடிகள் 232 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகள் அதிக அளவில் சிசிடிவி காட்சிகளும் அதிக அளவில் துணை ராணுவப் படையினரும் பணியில் அமர்த்தப்படுவார்.

புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் 24 குழுக்கள் போடப்பட்டுள்ளது. மேலும் 48 பறக்கும் படையினர் பணியில் அமர்த்தப்பட உள்ளது.மொத்தம் 60 பறக்கும் படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்…பறக்கும் படையினர்கள் மூலம் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட பணம் 6 கோடியே 50 லட்சம் உள்ளது அதனை உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தின் போது அதிக அளவில் வாகனங்கள் பயன்படுத்துவது குறித்து கேட்டதற்கு..? இதற்காகத்தான் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது அதனை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட அனுமதியோடு கூடுதல் இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு புகார் செய்யப்படும்.

கொடுக்கப்பட்ட அனுமதி உடன் வாகனங்கள் இருந்தால் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவது சம்பந்தமாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை இதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. வில்லியனூரில் நேற்று அரசு ஊழியர் வீட்டில் வருமானவரித்துறை ஊழியர்கள் சோதனை செய்து குறித்து கேட்டதற்கு.? புதுச்சேரி சேர்ந்த தேர்தல் பறக்கும் படையினர் இதனை சோதனை செய்யவில்லை வருமானவரித்துறையினர் செய்ததாக தெரிவித்தார். இது சம்பந்தமான முழு விபரங்கள் எனக்கு தெரியவில்லை…


Watch – YouTube Click

What do you think?

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

முகமதியா பள்ளிவாசலில் 5 ஆயிரத்துக்கு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை