in

இறுதி கட்டத்தை எட்டி திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணிகள் பணி தீவிரம்


Watch – YouTube Click

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் வார்னிஷ் அடிக்கும் பணி தீவிரம்.நாளை மறுநாள் தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள் மும்முரம்

சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வ தோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில்.இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் மார்ச் 21ம் தேதி நடைபெறவிருக்கிறது.அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் தற்போது பெரிய தேருக்கு ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி வார்னிஷ் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும்.சாதாரணமாக இந்த தேர் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது.நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது.இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ் சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும்.முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் இந்த தேரின் கட்டுமான பணிகள் தற்போது தொண்ணூறு சதவீதம் நிறைவுற்ற நிலையில் நாளை இரவு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர் அம்பாள் தேர் முருகர் தேர் விநாயகர் தேர் சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேருக்கான கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.இறுதி இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 600 முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆழித்தேர் எனப்படும் பெரியத் தேருக்கு வார்னிஷ் அடிக்கும் பணி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித் தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிவர்.எனவே அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

நாகை அருகே சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்

இன்றைய முக்கிய செய்திகள் 19-03-2024 | Today News Tamil | Britain Tamil News