in

திமுகவில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு


Watch – YouTube Click

திமுகவில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் தலைமையில் மறைந்த முன்னாள் திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான சச்சா முபாரக் துணைவியார் நூர்ஜஹான் முன்னிலையில் அதிமுக மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர்.

தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை மாவட்ட அவை தலைவர் செல்வம், நாகை நகர செயலாளரும் நகர மன்ற தலைவர்மான இரா.மாரிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினரும் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி சட்டசபை 22ந் தேதி கூடுகிறது இடைக்கால பட்ஜெட் தாக்கல்

உள்ளாட்சி அரசு பணியாளர்கள் சங்கங்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்