in

ஸ்ரீ புது அம்மன் திருக்கோவில் ஆடி முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

ஸ்ரீ புது அம்மன் திருக்கோவில் ஆடி முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் அருள்மிகு ஸ்ரீ கண்ணம்மன் ஸ்ரீ புது அம்மன் திருக்கோவில் ஆடி முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

           

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான நூற்றாண்டு பழமை வாய்ந்த நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் அருள்மிகு ஸ்ரீ கண்ணம்மன் ஸ்ரீ புது அம்மன் திருக்கோவில் ஆடி முளைப்பாரி உற்சவம் கடந்த ஏழாம் தேதி முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாள்தோறும் மாலையில் கும்மியடித்து அம்பாளை வழிபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று காலை சிறப்பு யாகசாலை பூஜைகளும் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது பின்னர் ஸ்ரீ கண்ணம்மா ஸ்ரீ புது அம்மன் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு பால் மஞ்சள் தயிர் இளநீர் குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மாலையில் பச்சை சப்பரத்தில் கண்ணம்மன் ஸ்ரீ புது அம்மன் முளைப்பாரி உடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் படைப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது

What do you think?

“SAY YES TO LIFE, NO TO DRUGS” என மனித சங்கிலி

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது