in

பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

புதுச்சேரி..நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு முதல் அமைச்சர் ரங்கசாமி கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கிராமப்புறங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த முதல் அமைச்சர்…
கூட்டம் கூட்டமாக நின்று வரவேற்ற மக்கள்..

புதுச்சேரி மக்களவை தேர்தலில் போட்டியிடும்பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், முதலியார்பேட்டை ஆகிய நகர பகுதி தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வந்த முதலமைச்சர் இன்று கிராமப்புறமான மங்களம் தொகுதி முழுவதும் மாலை முதல் இரவு வரை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

திறந்த வேனில் வேட்பாளர் நமச்சிவாயம், தொகுதி எம்எல்ஏவும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் ஆகியோருடன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.அப்பொழுது தொகுதி முழுதும் முதலமைச்சர் திறந்தவேனில் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு கேட்டார். அனைத்து வீடுகளின் சந்திப்புகளிலும் மக்கள் கூட்டமாக நின்று கொண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்பொழுது கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர்,கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் ஆதரவுடன் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நமச்சிவாயம் வெற்றி பெற்று மத்திய அமைச்சராவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் புதுச்சேரிக்கு கூடுதல் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார்.

அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வரும் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்


Watch – YouTube Click

What do you think?

எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்