in

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்


Watch – YouTube Click

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. 28ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 27 பேர் சமர்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மனுதாக்கல் செய்திருந்த பிரவீணா மனுவை திரும்ப பெற்றதால் புதுச்சேரியில் 26 பேர் போட்டியிடுவது உறுதியானது.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,புதுச்சேரியில் மக்களவைத்தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முதலில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.அதன்படி பாஜகவில் போட்டியிடும் நமச்சிவாயத்துக்கு தாமரையும், காங்கிரஸில் போட்டியிடும் வைத்திலிங்கத்துக்கு கை சின்னமும், அதிமுகவில் போட்டியிடும் தமிழ்வேந்தனுக்கு இரட்டை இலை சின்னமும், பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிடும் அலங்காரவேலுவுக்கு யானை சின்னமும் ஒதுக்கப்பட்டது.

பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி நாம் தமிழர் கட்சி மேனகாவுக்கு ஒலிவாங்கியும், சோசியலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சி சங்கரனுக்கு பானை சின்னமும், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி பிரபுதேவனுக்கு காஸ் சிலிண்டரும் ஒதுக்கப்பட்டது. அதையடுத்து 19 சுயேட்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார்

வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது