in

மக்கள் 5.30 மணி நேரத்துக்கு பின்பு வாக்களிக்க தொடங்கினர்


Watch – YouTube Click

நத்தம் அருகே தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் – 5:30 மணி நேரத்துக்கு பின்பு வாக்களிக்க தொடங்கினர்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சியில் உள்ளது சீரகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, ரேஷன் கடை, கழிவு நீர் வாய்க்கால், பொதுக் கழிப்பறை, குடிநீர் அங்கன்வாடி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரவில்லை எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணித்து ஊர் மந்தையில் உள்ள கோயில் அருகே ஆண்கள்,பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து அடிப்படை வசதிகள் செய்து தராததால் வாக்களிக்க மாட்டோம் என கோஷங்கள் எழுப்பி வந்தனர் இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது

சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டுக்கல் ஊரக ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாகராஜன், நத்தம் யூனியன் ஆணையாளர் கற்பகம், தேர்தல் சிறப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் குணசேகரன், நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி தனிப்பிரிவு சிறப்பு சார்பாய்வாளர் சின் குமாரசாமி உள்ளிட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் அத்தியாவசியம் தேவைகள் நிறைவேற்றுவதற்கான பணிகள் தேர்தலுக்குப் பின்பு செய்து தரப்படும் என உறுதி அளித்ததையடுத்து சீரகம்பட்டி கிராம பொதுமக்களிடம் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அனைத்து பகுதிகளையும் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 5:30 மணி நேரத்துக்குப் பின் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என அமைச்சர் நேரு பேட்டி

சாதனை, வேதனைகளை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் வாக்களிப்பர்