in

விரைவில் suntv..யில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்… மொக்கை சீரியலை நிறுத்த திட்டம்

விரைவில் suntv..யில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்… மொக்கை சீரியலை நிறுத்த திட்டம்

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று மற்ற சேனலுக்கு போட்டியாக சன் டிவி அதிரடியாக பல சீரியல்களை இறக்க முடிவு செய்திருக்கும் நிலையில் ரேட்டிங்கில் பின் தங்கியிருக்கும் சீரியல்களை நிறுத்த முடிவு செய்திருக்கிறது .சன் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் கயல், சிங்க பெண்ணே, எதிர்நீச்சல் ஆகிய சீரியல்களை தொடர்ந்து தற்பொழுது லட்சுமி என்ற புது சீரியல் விரைவில் ஒளிபரப்பவுள்ளது .

இதற்கான அறிவிப்பினை சன் டிவி வெளியிட்டிருகிறது. இதில் வானத்தைப்போல சீரியலில் கெஸ்ட் ரோலில் வரும் சஞ்சீவ் ஹீரோவாகவும்,தென்றல் சீரியலில் நடித்த ஸ்ருதி ஹீரோயின் ஆகவும் நடிக்க விருகிறார்கள்.அக்காவான ஸ்ருதி (லட்சுமி} திருமணத்திற்கு பின்பும் தனது குடும்பத்தை காப்பாற்ற நினைத்து தனது சம்பளத்தை தங்கைகளின் படிப்புக்கும், திருமணதிற்கும் சேர்த்துவைக்க லட்சுமி நினைக்க மறுபுறம் தன் வீட்டிற்கு வரும் மருமகளின் சம்பளத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று விரும்பும் மாமியாரும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான கதை தான் லட்சுமி .வழக்கம் போல குடும்ப செண்டிமெட்டுடன் நிச்சயம் இல்லத்தரசிகளை கண்ணீர் சிந்த வைக்கும் கதையாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

What do you think?

திண்டிவனத்தில் ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை

திருப்பாதிரிபுலியூர் பிடாரி அம்மன் கோவிலில் 79 ஆம் ஆண்டு 108 திருக்குட நன் நீராட்டு வைபவம்