in

கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்


Watch – YouTube Click

கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்

 

கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தல்.

இந்தியா முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.04.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கரூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 23.04.2024 மற்றும் 24.04.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,

குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும்,

வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பிரிட்டனில் அகதிகளை நாடு கடத்தும் சட்டம் நிறைவேறியது

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டி