in

அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருட்டு


Watch – YouTube Click

அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருட்டு

 

கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினம்தோறும் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருடி வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என – முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளுடன் புகைப்பட ஆதாரத்துடன் மனு அளித்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்

அமராவதி அணையையிலிருந்து வரக்கூடிய அமராவதி ஆற்றை நம்பி இருக்கக்கூடிய ஆண்டாள் கீழ் பாகம், மேல் பாகம், கருப்பம்பாளையம், அபிபாளையம், பல்லாப்பாளையம், விஸ்வநாதபுரி, தாளப்பட்டி ஆகிய என 18 க்கும் மேற்பட்ட குக்கிராம பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு தான் உள்ளது.

அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கரூர் எல்லையுடன் நிறுத்தி விடுகின்றனர்

அமராவதி அற்றில் தற்பொழுது தண்ணீர் இல்லாத நேரங்களில் தற்பொழுது லாரிகள் மூலமாக தண்ணீர் திருடி வருகின்றனர்.

மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் ஆண்டாங்கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினம்தோறும் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருடி வருகின்றனர்.

இதனால் ஆண்டாள் கோவில் கீழ்ப்பாக்கம் பஞ்சாயத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எந்த எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்

அமராவதி அணையில் 55 அடி நீர் உள்ளது குடிப்பதற்கு காக இந்த ஒரு முறை அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்தால் ஒரு மாதத்திற்கு குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்கும் இல்லையென்றால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் போதிய குடிநீர் கிடைக்காத நிலையில் அமராவதி அணையில் திறக்கப்படும் நீரானது கரூர் மாவட்ட எல்லையான சின்னதாராபுரம் பகுதியுடன் நிறுத்தி விடுகின்றனர். இதனால் கரூர் பகுதிகளில் குடிப்பதற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கரூர் மாவட்டத்தை மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

பூஜை அறைக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு

பழனி கோயிலுக்கு  7 லட்சம் மதிப்பிலான பேட்டரிகார் நன்கொடை