in

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது


Watch – YouTube Click

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது 21,879 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 515 மாணவ மாணவிகள்தேர்வு எழுதி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களிலும் என 104 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 4,491 மாணவர்களும், 4,809 மாணவிகளும் என 9,300 பேரும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 6,068 மாணவர்களும், 6,511 மாணவிகளும் என 12,579 பேரும் ஆக மொத்தம் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் 10,559 மாணவர்களும், 11,320 மாணவிகளும் என 21,879 மாணவ- மாணவிகள் உள்ளனர்.

இத்தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.

தேர்வின்போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வையொட்டி 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், மண்டல அளவிலான 7 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 28 மேல்நிலை விடைத்தாள் எடுத்துச்செல்லும் வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டு அம்மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மூலம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ஆடுகளம் நடிகர்

அடிக்கல், மற்றும் முடிவுற்ற கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் துவக்கி வைப்பு