in

பெண் மீது அரசு பேருந்து மோதிய விபத்து


Watch – YouTube Click

பெண் மீது அரசு பேருந்து மோதிய விபத்து

 

செஞ்சியில் சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது அரசு பேருந்து மோதிய விபத்து… சிசிடிவி கட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சக்கராபுரம் பகுதியில் வசித்து வரும் சுனிதா இவர் செஞ்சி நான்கு முனை கூட்டு ரோட்டில் உள்ள மருந்தகத்தில் மருந்துகள் வாங்கிக் கொண்டு திண்டிவனம் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து மோதியதில் கீழே விழுந்த சுனிதா மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் இவரின் கை நசுங்கி இரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.

இந்த விபத்தை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் ஓரமாக நடந்து கொண்டிருந்த பெண் மீது அரசு பேருந்து மோதி விபத்து சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த செஞ்சி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செஞ்சி காந்தி பஜார் மற்றும் செஞ்சி நான்கு முனை கூட்டு சாலையின் வளைவுகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் முறையாக இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் பெரும் விபத்து நடைபெறுவதற்கு முன் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களும்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தலைமை காவலரை உயிர்வதை – சாராய வியாபாரிகளுக்கு – இன்று பரபரப்பு தீர்ப்பு

கோமாவில் இருந்து எழுந்து தர்ஷிணி கல்யாணத்தை நிறுத்த வருகிறார் ஜீவானந்தம்