in

தண்ணீர் பெற்றுத் தந்த ஆட்சியருக்கு விவசாயி பரிசாக வழங்கிய கத்திரி


Watch – YouTube Click

தண்ணீர் பெற்றுத் தந்த ஆட்சியருக்கு விவசாயி பரிசாக வழங்கிய கத்திரி

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா 80 ஆயிரம் ஏக்கரிலும் 40 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடிகள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுமார் 40,000 ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் சூழ்நிலை இருந்து வந்தது அதை ஒட்டி நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 2 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 3ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது அதன்படி கடைமடை பகுதி வரை தண்ணீர் சேர்ந்ததால் தற்பொழுது தண்ணீர் தட்டுப்பாடு நீங்குள்ளதாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் திட்டத்திற்கு வருகை தந்த கிராமத்துமேட்டை சேர்ந்த இயற்கை விவசாயி முத்துக்குமரன் தனது வீட்டு தோட்டத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்த கத்திரிக்காய் கொண்டு வந்து அனைத்து விவசாயிகளின் சார்பில் பரிசாக மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்க்கிஸ்மிடம் வழங்கி அன்பு கோரிக்கையாக சமையலில் சேர்த்து ருசித்துப் பார்க்க வேண்டும் எனவும் நாகை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் இது போன்ற இயற்கை காய்கறி சாகுபடிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.


Watch – YouTube Click

What do you think?

புதுவையில் இருந்து இரண்டு சொகுசு கார்களில் மது பாட்டில் கடத்தல்

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா