in

கலைஞர் தொலைகாட்சியில் இருந்து வெளியேறிய கரு பழனியப்பன்……


Watch – YouTube Click

கலைஞர் தொலைகாட்சியில் இருந்து வெளியேறிய கரு பழனியப்பன்……

 

கலைஞர் தொலைகாட்சியில் இருந்து வெளியேறிய கரு பழனியப்பன்……இனி வா தமிழா வா நிகழ்ச்சியியை தொகுத்து வழங்குகிறார் பிக்க பாஸ் சீசன் Winner..

ஸ்ரீகாந்த் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தை இயற்றியவர் இயக்குனர் கரு பழனியப்பன் .

பிறகு விஷாலை வைத்து சிலப்பதிகாரம், சேரனின் பிரிவோம் சந்திப்போம், விமல் நடித்த ஜன்னல் ஓரம் போன்ற படங்களை இயக்கினார்.

இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். நீயா நானா என்ற நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

சுமார் ஐந்து ஆண்டுகள் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியவர் இயக்குனர் கரு பழனியப்பன். ஆனால் திடீரென்று சென்ற வருடம் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் அதன்பிறகு கலைஞர் டிவிக்கு சென்று வா தமிழா வா என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கிட்டத்தட்ட ஓராண்டு பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் இருந்தும் தற்பொழுது வெளியேறுவதாக கரு பழனியப்பன் கூறியுள்ளார்.

இவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்ப்பில் இந்த ரசிகர்களுக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி இந்த நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சிறுவர் சிறுமியர்கள் நடத்திய மல்லர் கம்ப சாகச நிகழ்ச்சி

மதுரை எய்ம்ஸ் செங்கலை நான் எப்பொழுது தருவேன் உதயநிதி புதிய விளக்கம்