in

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

 

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை விரைவில்… மூன்றாம் பாகம் டிசம்பர் மாதம் வெளியீடு

நடிகர் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களும் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் நிலையில். இந்தியன் 2 படத்தை பற்றிய சுடச்சுட அப்டேட் வெளியாகி இருக்கிறது.

1996 ஆம் ஆண்டு வெளியாகிய இந்தியன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தை வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி ரிலீசாகிறது.

மேலும் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் ஷூட்டிங் மட்டும் எடுக்கப்படாமல் இருப்பதால் விரைவில் அப்பாடலை முடித்துவிட்டு. வரும் மே 16ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக பட குழு அறிவித்திருக்கிறது.

ஷங்கர் தனது படத்தை மட்டும் அல்ல இசை வெளியீட்டு விழாவையும் பக்காவாக பிளான் பண்ணி இருக்கிறாராம். பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்தியன் 2 படத்தின் நீளம் கருதி அதனை மூன்று பாகமாக வெளியிட சங்க திட்டமிட்டுள்ளார். வருகிற ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஆகும் இந்த ஆண்டின் இறுதியில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு இந்தியன் 3 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

What do you think?

எல் ஐ சி பணியாளரை தாக்கிய நடிகை ராதா மீது போலீசில் புகார்

விடாமுயற்சி…இக்கு முன்பு வெளியாகும் Good Bad Ugly