in

சங்கரன்கோவில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம்

சங்கரன்கோவில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம்

 

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புமிக்க திருக்கோவிலாகும்.

இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில், இன்று ஐப்பசி மாத சுக்கிரவார வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமானுக்குப் பல்வேறு நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து நந்தியம்பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானையும், சங்கரலிங்க சுவாமியையும் வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

கும்பகோணம் அருகே ஒரே நாள் சிறிய மழையால் 500 ஏக்கர் சம்பா நடவு மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை