in

காா்த்திகை மாத திருவாதிரை அபிஷேகம்

காா்த்திகை மாத திருவாதிரை அபிஷேகம்

 

செப்பரை அழகிய கூத்தா் திருக்கோவிலில் காா்த்திகை மாத திருவாதிரை அபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான திருக்கோவில் அழகிய கூத்தா் (நடராஜா்) திருக்கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அருள்பாலிக்கின்றனா். ஹிரண்யவர்மன் என்கிற சோழ மன்னனின் காலத்தில் இங்கு உள்ள நடராஜா் திருஉருவம் செய்யப்பட்டது.

இந்த நடராஜ மூர்த்தியின் அழகினைக் கண்டு, மன்னன் அழகிய கூத்தர் என உருகினான். அதுவே இறைவனின் திருப்பெயராக விளங்கி நின்றுவிட்டது. புராதனமான இந்த சிலை திருமேனியை பேணி பாதுக்கும்பொருட்டு அவரை மூல மூா்த்தியாக அலங்கார திருமேனியாக சபையிவ் பிரதிஷ்டை செய்தும், உற்சவம் மற்றும் அபிஷேகங்களுக்கு ஆனந்தகூத்தா் என்ற பெயருடன் நடராஜா் சிவகாமி அம்பாளை அபிஷேக மண்டபத்தில் நுதனமாக பிரதிஷ்டை செய்திருக்கின்றனா்.

ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் இத் திருக்கோவிலில் காா்த்திகை மாத திருவாதிரை அபிஷேகம் இன்று நண்பகலில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக இன்று காலை நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்நது அபிஷேக மண்டபத்தில் சங்கு மற்றும் நவகலசங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து அபிஷேக மண்டபத்தில் ஏழுந்தருளிய ஸ்ரீ நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மாபொடி,மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், தேன், பஞ்சாமிருதம், அன்னம், இளநீா், வீபூதி, சந்தணம் போன்ற 16 வகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

நிறைவாக சங்கு அபிஷேகமும் அதனை தொடா்நது மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த மூலவா் நடராஜா் சிவகாமி அம்பாளுக்கு அா்ச்சனை நடைபெற்று நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி சோடச உபசாரங்கள் நடைபெற்றன.

அதேபோல் உற்சவா் ஆனந்தகூத்தருக்கும் அா்ச்சனை அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக வேத பாராயணம் பஞ்ச புராணம் பாடி கற்பூர ஆரத்தி நடைபெற்றது.

நடராஜா் அபிஷேகத்தை திரளான பக்தா்கள் தாிசனம் செய்தனா். வந்திருந்த பக்தா்களுக்கு பிரசாதமாக அன்னதானம் பஞ்சாமிருதம் வழங்கப்பட்டது.

What do you think?

பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்த கைதி தப்பி ஓட்டம்… போலீசார் அதிரடி!

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு த.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்