நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் தேவி ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோவில் ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் மோதிலால் தெருவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வளைகாப்பு உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது அன்றைய தினம் அம்மன் முன்பு முளைப்பாரி போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .
தொடர்ந்து எட்டு நாட்கள் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் ஆடிப்பூர திருநாளான இன்று வளைகாப்பு உற்சவம் கோலாலமாக நடைபெற்றது இதனை ஒட்டி திரளான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளிய தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன் வளைகாப்பு நடைபெற்றது இதனை ஒட்டி அம்மனுக்கு சிறு வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு நலுங்கு வைக்கப்பட்டது.
பின்னர் புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு உற்சவம் நடந்தது தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முளைகட்டிய பயிர்கள் அம்பாள் மடியில் நிரப்பி மகா தீபாராதனை நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்


