in

பலத்த மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

பலத்த மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 

சிதம்பரம், அண்ணாமலைநகர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் முதல் சிதம்பரம், அண்ணாமலைநகர், வல்லம்படுகை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் சாரல் மழையாக துவங்கிய மழை கனமழையாக பெய்தது.

சுமார் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் இந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்