in

சிதம்பரம் நடராஜர் கோயில் காடவராய கோப்பெரும் சிங்கன் பிறந்தநாள் விழா

சிதம்பரம் நடராஜர் கோயில் காடவராய கோப்பெரும் சிங்கன் பிறந்தநாள் விழா

 

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் காடவராய கோப்பெரும் சிங்கன் பிறந்தநாள் விழா

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிழக்கு கோபுரத்தை கட்டிய வரும் தில்லை காளியம்மன் கோயிலை கட்டிய வருமான காடவராய கோப்பெரும் சிங்கண் 816 வது பிறந்தநாள் விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் காடவராய கோப்பெறும் சிங்கன் கடலூர் மாவட்டத்தில் பொன்னேரியை வெட்டியதாகவும் கல்வெட்டு வரலாறு கூறுகிறது அச்சிறப்பு வாய்ந்த அவருடைய ஆவணி திருவோணம் நட்சத்திரமான புதன்கிழமை அன்று பிறந்தநாள் விழா காண்டவராய அறக்கட்டளை சார்பில் நடராஜர் கோயிலில் வெகு சிறப்பாக
கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு அர்ச்சனையும் , கிழக்கு கோபுரத்தில் உள்ள அவரது திரு திருஉருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெண்பட்டாளை அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் செய்யப்பட்டது
விழாவை முன்னிட்டு முன்னதாக மாமன்னன் காடவராய கோப்பெரும்சிங்கன் படம் ஊர்வலம் நடைபெற்று நடராஜர் திருக்கோயில் அடைந்தது.

பின்னர் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தியாகவல்லி சாமி கச்சிராயர், கடலூர் சீனிவாச படையாட்சி, ரமேஷ் கச்சிராயர் உள்ளிட்டோர் அவரது வழிமுறையைச் சேர்ந்தவர்கள் முன் நின்று நடத்தினர்.

விழாவில் பண்டைக்கால வாத்தியங்கள் இசைக்கப்பட்டதை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் திருவுருவப்படத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உட்புறமாக சுற்றி வந்து பின்பு தில்லை காளி கோயிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

பின்பு தில்லை காளி கோவில் அபிஷேகம் சிறப்பு ஆராதனை அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கச்சிராய பரம்பரையைச் சேர்ந்த உறவினர்கள் முன்னோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

What do you think?

பண்ருட்டியில் கல்லூரி மாணவர் மர்ம மரணம் – கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

திருவாடானையில் சற்று முன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி