in

சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் பரபரப்பு!

சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் பரபரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர் மகன் கோபி 48 விவசாயக் கூலி தொழில் செய்து வருகிறார், இவருக்கு முதுகு தண்டுவடத்தில் வலி பிரச்சனை இருந்ததால் சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுர வாயில் பகுதியில் உள்ள கண்ணன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரத்தில் கோபிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது உடனடியாக உறவினர்களுக்கு யாருக்கும் சொல்லாமல் அவரை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மருத்துவமனையை மூடிவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தவறான சிகிச்சை அளித்து கோபி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதி கேட்டு உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு பின்னர் கீழ ரத வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இறந்து போன கோபியின் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் கதறி அழும் காட்சிபிள்ளைகள் உறவினர்கள் கதறி அழும்காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

What do you think?

சபாநாயகருடன் பேச்சுவார்த்தை: போராட்டத்தை திரும்பப்பெற்ற திமுக!

செஞ்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு முன்பு சுமை தூக்கும் கூலி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.