கிராமங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
புவனகிரி அருகே அண்ணாமலையின் வீ த லீடர் அமைப்பினர் கிராமங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
20 லட்சம் மரக்கன்றுகள் நடுவோம் என்று இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவிப்பு.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை கிராமத்தில் வீ த லீடர் அமைப்பினர் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிராமத்தில் உள்ள குளக்கரை, ஏரிப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், பனை விதைகளும் ஏராளமான அளவில் நடப்பட்டன.
இதில் புவனகிரி தொகுதியின் பொறுப்பாளர் திருமாவளவன், புவனை வெற்றிவேல் உள்ளிட்ட பல நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் என பலர் பங்கேற்று மரக்கன்றுகள், பனை விதைகள் நடுதல் உள்ளிட்டவைகளை செய்தனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது பூமியின் வறட்சி மற்றும் வெப்பத்தை போக்கும் விதமாகவும் வீ த லீடர் அமைப்பின் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் பேரிலும் இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் அதன்படி புவனகிரி அருகே வடக்குத்திட்டை மற்றும் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

