in

சிதம்பரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தை கடலூருக்கு மாற்றுவதாக தகவல்.

சிதம்பரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தை கடலூருக்கு மாற்றுவதாக தகவல்.

சிதம்பரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தை கடலூருக்கு மாற்றுவதாக தகவல். துணை மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு நகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகர் பகுதியில் உள்ளது. இங்குள்ள துணை மேலாளர் அலுவலகத்தை கடலூருக்கு மாற்றம் செய்யப்போவதாக தகவல் பரவியது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ரவீந்திரன் தலைமையில் சுமார் 50 விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு முன்பு திரண்டனர துணை மேலாளர் அலுவலகத்தை கடலூருக்கு மாற்றும் முடிவை கைவிட வலியுறுத்தி அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது விவசாயிகள் சங்க நிர்வாகி ரவீந்திரனிடம் செல்போனில் பேசிய கடலூர் மாவட்ட அதிகாரிகள்,

துணை மேலாளர் அலுவலகத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுக்கவில்லை. அந்த அலுவலகம் அங்கேயே தொடர்ந்து செயல்படும் எனக் கூறினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன்,

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசன பகுதிகளின் அடையாளமாக சிதம்பரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் துணை மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை கடலூருக்கு மாற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிகாரிகளுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முற்றுகை போராட்டம் நடத்த வந்தோம்.

இந்த தகவலை அறிந்த நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் எங்களிடம் பேசி அது போன்ற திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலத்திலும் இந்த அலுவலகத்தை மாற்ற மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்கள். அதனால் இந்தப் போராட்டத்தை தற்போது தற்காலிகமாக கைவிடுகிறோம்.

மண்டல மேலாளர் அலுவலகத்தை கடலூருக்கு மாற்றும்போது துணை மேலாளர் அலுவலகம் இங்கு செயல்படும் என உறுதி அளித்தார்கள். தற்போதும் அதிகாரிகள் அதே உறுதிமொழியை அளித்துள்ளார்கள். எதிர்காலத்தில் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்ற பிறகு போராட்டத்தை நிரந்தரமாக கைவிடுவோம்.

கடலூர் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் முக்கிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் இயக்கம் சீராக இல்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் உபகரணங்களை வழங்கி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

பேட்டி. திரு. ரவீந்திரன், தலைவர், கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு.

What do you think?

திருவண்ணாமலைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா