in

16 குடிசை வீடுகள் மின் கசிவினால் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசமானது

 

16 குடிசை வீடுகள் மின் கசிவினால் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசமானது

 

புவனகிரி அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் 16 இருளர் குடியிருப்பு வாசிகளின் வீடுகள் மின்கசிவினால் எரிந்து சாம்பலான சோக‌ நிகழ்வு

புவனகிரி தொகுதி வீ த லீடர்ஸ் அமைப்பினர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கினர்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரேகான் தைக்கால் மே.பேட்டை பகுதியில் வசித்து வரும் இருளர் குடியிருப்பு வாசிகளின் 16 குடிசை வீடுகள் மின் கசிவினால் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசமானது

இந்நிலையில் சம்பவம் அறிந்து புவனகிரி தொகுதி வீ த லீடர்ஸ் அமைப்பினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைப்பின் புவனகிரி தொகுதி பொறுப்பாளர் திருமாவளவன் தலைமையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பாய் தலையணை புடவை வேஷ்டி உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிவாரணமாக வழங்கினர்

 

மேலும் அமைப்பின் நிறுவனர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உத்தரவுக்கிணங்க உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்து தர தயாராக உள்ளோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களிடம் அமைப்பினர் தெரிவித்தனர்

What do you think?

ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில்திருத்தேர் உற்சவம்  நடைபெறுகிறது

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்