மதுரையில் மாவட்ட JM5 நீதிமன்ற நீதிபதி வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோக்கி பேரணி
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் JM-5 (5 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ) நீதிமன்ற நீதிபதி வழக்கறிஞர்கள், வழக்காடிகள், பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறியும், நீதிபதியின் சட்டமீறுதல் நடவடிக்கையை கண்டித்தும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து.
தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு ( JAAC) மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் பேரணி அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உத்தங்குடி பகுதியில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நோக்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
சேலம், தஞ்சாவூர், கன்னியாகுமரி ,விருதுநகர் , திருப்பத்தூர் , நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும்வெயிலில் பேரணியாக நடந்துசென்றனர். பேரணியின்போது தங்களது கோரிக்கைகளை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

வழக்கறிஞர்கள் பேரணி காரணமாக மதுரை கே.கே.நகர் முதல் மாட்டுத்தாவணி உத்தங்குடிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் பேரணியை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றம் தொடங்கி உயர்நீதிமன்ற அமர்வு முன்புவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நீதித்துறை நடுவரை கண்டித்து ஒரு மணி நேரமாக பேரணியாக நடந்துவந்த வழக்கறிஞர்கள் உத்தங்குடி பகுதியில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வு முன்பாக வந்தபோது அங்கு வைக்கப்பட்ட தடுப்புகளை தாண்டி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்துநிறுத்தியதால் காவல்துறையினருக்கும் , வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் தடுப்புகளை தாண்டி உயர்நீதிமன்ற கிளை வளாகத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்அப்போது பேரணியில் கலந்துகொண்ட மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் மோகன்குமார் உடல்சோர்வு ஏற்பட்டு மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்துசென்றனர்
JM5 நீதிமன்ற நீதிபதியை கண்டித்து Jm5 நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு, சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை வழக்கறிஞர்கள் நடத்தி வந்த நிலையில் இன்று தமிழக முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வழக்கறிஞர்கள் பங்கேற்க கூடிய பேரணி நடைபெற்றது குறிப்பிடதக்கது
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார்.
நீதிபதி அவர்கள் வழக்கறிஞர்களை அவதூறாக பேசி அவமரியாதை நடத்தியுள்ளார் எனவே இந்த போராட்டம் நடைபெற்றது நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
பைட்- 1 வழக்கறிஞர்.நந்தகுமார் – தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு தலைவர் (JAAC)


